காட்டு பன்றியை வேட்டையாடி சமைத்தவர் கைது

4 months ago 12

ரெட்டியார்சத்திரம், அக். 25: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் தருமத்துப்பட்டி போடேரி மேடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (59). விவசாயி. இவரது நிலத்தில் விளைபயிர்களை காட்டு பன்றிகள் அழித்து அட்டகாசம் செய்து வந்தன. இதனால் ரவிச்சந்திரன் ஒரு காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வானவர் அய்யனார் செல்வம், வனக்காப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் ரவிச்சந்திரன் காட்டு பன்றியின் இறைச்சியுடன் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

The post காட்டு பன்றியை வேட்டையாடி சமைத்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article