காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தீவிரம்: அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

4 hours ago 4

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசின் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் நம் மண், மொழி, மானம்காக்க, ஓரணியில் தமிழ்நாடு எனும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் க.சந்தர் எம்எல்ஏ வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வீடு, வீடாக சென்று அரசின் செயல்பாடு, மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்காளர் சேர்க்கையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையின் போது ஒன்றிய செயலாளர் குமார், அறநிலைய குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் ரவி, பாலமுருகன், துணைத்தலைவர் நந்தா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

மேலும் இதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வீடு வீடாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மேற்கொண்டார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், கவுன்சிலர் ருத்ரக்கோட்டை, ஊராட்சி மன்ற தலைவர் மங்களகௌரி வடிவேலு உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.
மேலும் அச்சிறுப்பாக்கம் பேரூர் திமுக சார்பில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை நிகழ்ச்சி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

பின்னர் வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களை நேரில் சந்தித்து எந்தநெருக்கடியான சூழலிலும் தமிழ் நாட்டின் மண், மொழி மானம் காப்பாற்றப் பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?, மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர் காலத்தை பாதுகாத்திட வேண்டுமா? டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் முதல்வர்தான் தம் மாநிலத்தை ஆள வேண்டுமா?. இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவமிக்க மு.க.ஸ்டாலின் போன்ற ஒருதலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா? அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன் தாங்களும் தங்கள் தங்கள் குடும்பமும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என கரம் கோர்க்க விரும்புகிறிர்களா? போன்ற 6 கேள்விகளைக் கேட்டார்.

அப்போது, அந்த வீட்டில் இருந்த பெண் ஆம் என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த பரப்புரையின்போது ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கோகுல கண்ணன், பேரூர் செயலாளர் எழிலரசன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், பொதுக்குழு உறுப்பினர் உசேன், பேரூராட்சி தலைவர் நந்தினி, ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுரேஷ், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சிவசங்கரன் உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.

 

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தீவிரம்: அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article