
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவில் முகப்பில் உள்ள 21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு டிரோன் மூலம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சிவபெருமான் திருவுருவ சிலைக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டிரோன் கருவி மூலம் சிவபெருமானுக்கு 21 லிட்டர் பாலை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.