காஞ்சி கோயிலின் ரூ.8 கோடி மதிப்பிலான ‘சோமஸ் கந்தர்’ சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு - மீட்கும் பணி தீவிரம்

3 months ago 28

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சோமஸ் கந்தர்’ வெண்கலச் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்புள்ள இந்த சிலையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட பழங்கால சிலைகளை கண்டறிந்து மீட்கும் பணியில் தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி தினகரன் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக வடக்கு மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி, அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸ்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் ஒரு வெண்கல சோமஸ் கந்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். இந்த சிலையானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலை சேர்ந்தது என்று அருங்காட்சியகம் நடத்துபவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

Read Entire Article