காங்கயம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் 600 இடங்களில் கலெக்டர் ஆய்வு

1 day ago 5

காங்கயம், மே 22: காங்கயம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களைதேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று காலை 9 மணி முதல் பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட அளவிலான அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். காங்கயம் வட்டம், படியூர் ஊராட்சி, வடக்குபாளையம் பகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்முருங்கை சாகுபடி மற்றும் தெற்குபாளையம் பகுதியில் வேளாண்மைதுறை சார்பில் தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் சந்தனமரம் சாகுபடி செய்யப்பட்டு வருவது, காங்கயம் நகராட்சி அண்ணாநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்நோக்கு மையம் கட்டும் பணி மற்றும் காங்கயம் வட்டம், வீரணம்பாளையம் ஊராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது,

சேமலைவலசு பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்கட்டப்பட்டு வரும் வீடுகளையும், வீரணம்பாளையத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் தலா 300 சதுர அடியில் 92 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பாப்பினி ஊராட்சி, பச்சாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி சீட்டு வழங்குமிடம், மருத்துவர்அறை, புறநோயாளி பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் என சுமார் 600 இடங்களில் ஆய்வுமேற்கொண்டனர். தொடர்ந்து, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்தும், பொதுமக்களிடம் வரபெற்ற கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ்ராஜா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, தனிதுணைஆட்சியர் (சமூகப்பாதுகப்புத்திட்டம்) பக்தவச்சலம், காங்கயம் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், காங்கயம் வட்டாட்சியர் மோகனன், காங்கயம் வட்டார வளர்ச்சி ராஜேந்திரன், அனுராதா மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post காங்கயம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் 600 இடங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article