கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா

2 weeks ago 4

 

ஈரோடு, ஜன. 14: ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நேற்று நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோயிலில் கடந்த 31ம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி விழாவின் ஒரு பகுதியாக பகல் பத்து நடந்தது. 10ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தற்போது இராப்பத்து உற்சவம் நடக்கிறது. இந்நிலையில், மார்கழி மாதம் நிறைவு பெற்ற நாளான நேற்று ஆண்டாள் இறைவனுடன் கலந்ததாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. இதனை போற்றும் வகையில், மார்கழி மாத நிறைவு நாளான நேற்று காலை கோயிலில் கஸ்துாரி அரங்கநாதருக்கும், ஆண்டாளுக்கும் திருக்கல்யாண வைபவம் வைதீக முறைப்படி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

The post கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா appeared first on Dinakaran.

Read Entire Article