கஸ்டர்டு கேக்

1 day ago 5

தேவையானவை:

மைதா – 1¼ கப்,
வெனிலா கஸ்டர்டு பவுடர் – ¾ கப்,
சுகர் பவுடர் – ¾ கப்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – ¼ டீஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் – ½ கப்,
வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்,
வினிகர் – 1 டீஸ்பூன்,
பால் – ½ கப்.

செய்முறை:

மைதா, கஸ்டர்டு பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா அனைத்தும் கலந்து சலிக்கவும். மிதமான சூட்டில் உள்ள பாலில் வினிகர் கலந்து பட்டர் மில்க் தயாரிக்கவும். ஒரு பவுலில் உருக்கிய வெண்ெணய், சர்க்கரை பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும். அதனுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கட் அண்ட் போல்ட் முறையில் பீட் செய்து வைத்து அனைத்தும் கேக் மோல்டில் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து, 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். சுவையான கஸ்டர்டு கேக் தயார்.

The post கஸ்டர்டு கேக் appeared first on Dinakaran.

Read Entire Article