
சென்னை,
கவர்னர் விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் குறிப்பை கண்டிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசமைப்பு நிலைப்பாட்டை தகர்க்க முயற்சிக்கும் ஜனாதிபதி குறிப்பை கண்டிப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், கவர்னர்கள் செயல்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபனை இருக்க வேண்டும் என்றும் முதல் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.