கவர்னரின் பாராட்டு விழாவில் அஜித் பங்கேற்க மாட்டார் - சுரேஷ் சந்திரா தகவல்

1 week ago 4

சென்னை,

பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்ட 2025-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி என தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.

இதற்கிடையில், கவர்னர் ஆர்.என்.ரவி பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என, அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். 

ஆளுநர் பாராட்டு விழா - "அஜித் பங்கேற்க மாட்டார்"பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பாராட்டு விழாநடிகர் அஜித் பங்கேற்க மாட்டார் என மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல்#AjithKumar #ak #RNRavi #ThanthiTV pic.twitter.com/Gx9sI5L70o

— Thanthi TV (@ThanthiTV) February 14, 2025
Read Entire Article