சென்னை: மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11ம் தேதி இயக்கப்பட்ட பாக்மதி விரைவு ரயில் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் விபத்துக்குள்ளானது. கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டிந்தது தெரியவந்துள்ளது.
நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் லூப் பாதையில் சென்று விபத்துக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. பாக்மதி விரைவு ரயில் விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதுமின்றி தவிர்க்கப்பட்டது. மேலும் விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. விபத்துக்கு சதி செயல் ஏதேனும் நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
The post கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை appeared first on Dinakaran.