
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தார்த்நகர் மாவட்டத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 53 பேர் பயணித்தனர்.
சித்தார்ந்த்நகரின் ஷர்கவா பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே சைக்கிளில் ஒரு நபர் வந்துள்ளார். சைக்கிளில் மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகே இருந்த கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த ஒருவர், பஸ் பயணிகள் 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.