நாகப்பட்டினம், பிப்.6: நாகை மாவட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், மனம் திருந்தியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குவது தொடர்பான குழு கூட்டம் கலெக்டர் ஆகாஷ், எஸ்பி அருண் கபிலன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குவது தொடர்பான குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தியவர்களை கண்டறிந்து மறுவாழ்வு நிதிவழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
காவல் துறையால் தெரிவு செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்திய பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் வழங்கப்படும் மறுவாழ்வு நிதியினை உரிய முறையில் தொழில் தொடங்க பயன்படுத்த வேண்டும் என்றும், குடும்ப உறுப்பினர்களுக்கு பிற துறைகளின் மூலம் உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதியுதவி தொடர்பான குழு கூட்டம் appeared first on Dinakaran.