கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

4 months ago 19

புதுடெல்லி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிப்பு காரணமாக சுமார் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தாலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அவர்களில் சிகிச்சை பலனில்லாமல் 68 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கை முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த சூழலில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்தும், இடைக்கால தடை விதிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல் டி. குமணன் மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்நிலையில் இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read Entire Article