கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மகளிர் குழுக்களை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

8 hours ago 2

*ஆட்சியர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள், புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், மகளிர் சுய தொழில் விவரம், மகளிர் கடனுதவி செயல்பாடுகள், மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து வட்டார வாரியாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

கிராமப்புறங்களிலுள்ள மகளிர் முன்னேற்றத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்கு அளப்பறியது. எனவே சுய உதவிக்குழு கடன்களை மகளிர் உரிய முறையில் பயன்படுத்தி சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் புதிய மகளிர் குழுக்களை உருவாக்க பெண்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மகளிர் குழுக்களை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article