புதுக்கோட்டை, ஜன.11: புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை மாணவர்களின் களைக்கட்டிய சமத்துவ பொங்கல் விழா, கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய உடை உடுத்தி ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு ஆட்டம் பாட்டத்துடன் பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று அசத்தினர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14ம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் அக்கல்லூரி மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பாரம்பரிய உடைகளான தாவணி பாவாடை சேலை வேஷ்டி சட்டை உள்ளிட்ட உடைகளை அணிந்து கல்லூரிக்கு வந்து ஆண்கள் பெண்கள் என இருபாலரும் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.மேலும் இந்தப் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பானை உடைத்தல் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு அசத்தினர்.
The post களைக்கட்டிய சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.