கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்: மு.க.ஸ்டாலின்

2 hours ago 1

சென்னை,

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்பு, சென்னை பாண்டி பஜாரில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டு உள்ள முதல்வர் மருந்தகத்தை அவர் பார்வையிட்டார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக அரசு ஆட்சிக்கு வந்த கொரோனா காலத்தில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை பெருமளவில் கட்டுப்படுத்தினோம். இரண்டு தவனை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி மக்களை காப்பற்றினோம். இதுதான் உயிர் காக்கும் பணி.

கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி தரமான மருத்துவம் கிடைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறைந்த விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை நமது அரசு சாதாரண, சாமானியனுக்கான அரசு என்பதற்கு சான்றே இந்த திட்டம். நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்

முதல்வர் மருந்தகம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, சென்னை சாலிகிராமம் உட்பட்ட தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 48 மணி நேரத்தில் மருந்துகளை அனுப்பி வைக்க வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருந்தாளர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மருந்தகம் அமைக்க தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும். பி.பார்ம் படித்த 1,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவுகளை குறைக்கவே, முதல்வர் மருந்தகம். திராவிட மாடல் அரசு சாதாரண மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தின் நோக்கம் சிதையாமல் அதை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். நிதி நெருக்கடி இருந்தாலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளது. மக்களின் சுமையை குறைக்க.. இது சாமானிய மக்களுக்கான அரசு. மக்களுக்கு நன்மை செய்வதில் திராவிட மாடல் அரசு கணக்கு பார்ப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article