தூத்துக்குடி: “மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதுதான் பெரியார் கண்ட கனவு.” என்று தூத்துக்குடியில் நடந்த புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார் . இந்த திட்டத்தால் 75,028 மாணவிகள் பயனடைவார்கள்.