“கல்வித் துறைக்கு ரூ.44,000 கோடி செலவிடும் தமிழக அரசுக்கு ரூ.2,000 கோடி வராததால் பிரச்சினையா?” - அண்ணாமலை

4 months ago 15

சேலம்: “தமிழக அரசு கல்விக்காக ரூ.44 ஆயிரம் கோடியை செலவிடுகிறது. மத்திய அரசு பல கல்வித் திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிலையில், சமக்ர சிக்‌ஷா என்ற ஒரு திட்டத்துக்கான ரூ.2 ஆயிரம் கோடியை வழங்காததால், கல்வித் துறை நடத்த முடியவில்லை என தமிழக அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் மாணவர்கள் 3 மொழிகளை படிக்க வேண்டுமா என்பதுதான் தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 52 லட்சமாக இருக்கிறது.

Read Entire Article