கல்வி தரத்தை மேம்படுத்தவே கட்டாய தேர்ச்சி ரத்து: தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்தது ஏன்? - அண்ணாமலை

11 hours ago 1

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தும்போது, தேர்தல் நடத்தை விதி பிரிவு 93 (2)-ல் மாற்றம் செய்து வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரித்து பேசுகின்றனர். இதுவரை அப்படி வழங்கப்பட்டதில்லை. இந்த திருத்தம் மூலம் அச்சமின்றி வாக்களிக்க முடியும்.

Read Entire Article