சென்னை: கல்வராயன் மலைப் பகுதியில் பேருந்து சேவைக்கேற்ற சாலை வசதிகள் உள்ளதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வரும் அக்.22 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷத்தன்மை கொண்ட கள்ளச்சாராயம் அருந்தி 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதையடுத்து கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.