கல்வராயன் மலை சாலையை 3 வாரங்களில் சீரமைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

3 weeks ago 4

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டதில் விஷ சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்குள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை-சின்ன திருப்பதி சாலையை 3 வாரங்களில் சீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 4 வாரங்களில் பேருந்து போக்குவரத்தை தொடங்க சேலம் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து மாவட்ட கலெக்டருக்கு விலக்களித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Read Entire Article