கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - வாலிபர் கைது

2 months ago 15

மும்பை,

மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிக்கு, தனது தோழி மூலமாக 20 வயது வாலிபர் ஒருவர் அறிமுகமானார். நாளடைவில் வாலிபருடன், மாணவியின் நட்பு நெருக்கமானது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக சுற்றியுள்ளனர். நட்புடன் பழகி வந்த அந்த பெண்ணை, வாலிபர் பல்வேறு சந்தர்பங்களில் ஆபாசமாக படம் பிடித்ததாக தெரிகிறது.

பின்னர் அந்த படங்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு வாலிபரின் மற்றொரு நண்பரும் உதவியாக இருந்ததுடன், அவரும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Read Entire Article