கல்லக்கொரை கிராமத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

4 months ago 13

 

ஊட்டி, பிப். 19: ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகளின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லக்கொரை கிராமத்தில் நடந்தது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி அருகேயுள்ள கல்லக்கொரை கிராமத்தில் நடந்தது.

கல்லூரி மாணவிகள் நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறினர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இது போன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், 100 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதத்துறை உதவி பேராசிரியர் கல்பனா செய்திருந்தார். தமிழ்துறை உதவி பேராசிரியர் தவணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கல்லக்கொரை கிராமத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article