லால்குடி, ஜூலை 2: திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியின் சாதாரண கூட்டம், கூட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் பால்துரை கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து கல்லக்குடி பேரூராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்திற்காக மீண்டும் மஞ்சப்பை தயாரிக்கும் இயந்திரம் வாங்குவதற்கும்,ரூ 5 கோடியே 46 லட்சம் மதிப்பில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
தற்போது பேரூராட்சியில் உள்ள கே.கே நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரம் செலவில் வடிகால் மற்றும் 9 லட்சத்து 27 ஆயிரம், கே.கே. நகர்,டால்மியா மெயின் ரோடு குறுக்குதெருவில் குடிநீர் பைப் லைன் விஸ்தரிப்பு பணிகள், கேகே நகர் மற்றும் திருவள்ளூர் நகரில் ரூ.12 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் சாலை அமைத்தல் மேலும் லால்குடி எம்எல்ஏ செளந்தரபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் முதுவத்தூர் சாலை பிரிவு இடத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என கூட்டத்தில் தெரிவித்தார்.
கூட்டத்தில் திமுக, அதிமுக, அமுமக மற்றும் சுயேட்சை வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இளநிலை அலுவலர் குமார் தீர்மானங்களை வாசித்தார். முன்னதாக இளநிலைஅலுவலர் செந்தமிழ்செல்வன் வரவேற்றார். முடிவில் குடிநீர் பராமரிப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
The post கல்லக்குடி பேரூராட்சியில் ரூ.41.50 லட்சத்தில் வடிகால்,சாலை,குடிநீர் வசதி appeared first on Dinakaran.