உளுந்தூர்பேட்டை: கல்குட்டையில் மனைவி, மகனை தள்ளி கொலை செய்து விட்டு, என்எல்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி 10து பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் முத்துக்குமார் (53). என்எல்சி சொசைட்டி ஊழியர். இவரது மனைவி தேவி (40), மகன் பிரவீன்குமார் (12). நெய்வேலியில் இருந்து சொந்த ஊரான உளுந்தூர்பேட்டை அருகே அஜிஸ் நகரில் வசிக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு பைக்கில் மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கல்குட்டை அருகே மரத்தில் முத்துக்குமார் சடலம் தூக்கில் தொங்கியபடி கிடந்ததையும், கல்குட்டையில் தேவி, பிரவீன்குமார் சடலம் கிடந்ததையும் அப்பகுதியினர் பார்த்து எடைக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், முத்துக்குமார் தனது மனைவி மற்றும் மகனை கல்குட்டையில் தள்ளி கொலை செய்துவிட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனினும் சந்தேக மரணம் (194) பிரிவின்கீழ் வழக்குபதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்கூட்டியே பணம் அனுப்பிய முத்துக்குமார்
முத்துக்குமார் நெய்வேலியில் இருந்து அஜிஸ்நகர் புறப்படுவதற்கு முன்பு, செல்போனில் இருந்து அவரது தம்பி ரகுநாதனுக்கு ரூ50 ஆயிரம் ஜிபே அனுப்பியுள்ளார். இதுபற்றி ரகுநாதன் செல்போனில் அழைத்து கேட்டதற்கு ேநரில் வந்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார் குடும்பத்தினருடன் பிணமாக மீட்கப்பட்டதால், இறுதிச்சடங்கு செலவுக்காக முன்கூட்டியே பணத்தை சகோதரருக்கு அனுப்பி வைத்தாரா? என விசாரணை நடக்கிறது.
The post கல்குட்டையில் தள்ளிவிட்டு மனைவி, மகனை கொன்று என்எல்சி ஊழியர் தற்கொலை: நெய்வேலியில் பயங்கரம் appeared first on Dinakaran.