'கல்கி 2-ன் மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' - பிரபாஸ்

5 hours ago 2

மும்பை,

'கல்கி 2898 ஏடி' படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, இயக்குனர் நாக் அஸ்வின் அதன் 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிந்துள்ளநிலையில், மீதி படப்பிடிப்பு துவங்க தாமதமாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில், இதுவரை கல்கி 2 குறித்து எதையும் பதிவு செய்யாத பிரபாஸ் தற்போது அதை பற்றி பகிர்ந்துள்ளார். நேற்று இயக்குனர் நாக் அஸ்வின் தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு பிரபாஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அதில், கல்கி 2-ன் மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

தற்போது 'பிரபாஸ் தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் நடித்து வருகின்றனர்.

Read Entire Article