கலைமாமணி நவீனன் நினைவு விருதுகள் வழங்கும் விழா

2 months ago 12

 

புதுக்கோட்டை, நவ. 17: சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் நவீனன் நினைவு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, வாசகர் பேரவையின் தலைவர் ஞானாலயா. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் தங்கம் மூர்த்தி, சேதுராமன், எழுத்தாளர் சோலச்சி, எம். தாமோதரக்கண்ணன் ஆகியோருக்கு நவீனன் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை எழுத்தாளர் நவீனனின் மகனும் அறக்கட்டளையின் நிர்வாகியுமான ரவி நவீனன் வழங்கினார். அவர் எழுதிய உழல் வலிகள் என்ற நூலை அறிமுகம் செய்து, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி பேசினார். விழாவில், டாக்டர். ராம்தாஸ், சத்தியராம் ராமுக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முன்னதாக வாசகர் பேரவையின் செயலர் பேரா. சா. விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் அ.சி. நாகேஸ்வரன் நன்றி கூறினார்.

The post கலைமாமணி நவீனன் நினைவு விருதுகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article