கலைஞர் விருது வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

3 months ago 20

சென்னை: கலைஞர் விருதுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் அடியொற்றித் தாய்த்தமிழுக்குத் தொண்டாற்றும் அறிஞர் ஒருவருக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் விருது‘ என்ற புதிய விருது தோற்றுவிக்கப்பட்டு, விருதுத்தொகையாக ரூ.10 லட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம் ஆகியன வழங்கிச் சிறப்பிக்கப்பெறும் என மானியக் கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2025ம் ஆண்டு 2ம் நாளான திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படும் திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகிய விருதுகளோடு புதிய விருதான முத்தமிழறிஞர் கலைஞர் விருதையும் இணைந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

www.tamilvalarchi thurai. tn.gov.in/awards என்ற http://awards.tn.gov.in இணைய தளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை நிறைவு செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக வரும் 30ம் தேதிக்குள் தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளனர்.

The post கலைஞர் விருது வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article