கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவம்: பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி

3 months ago 20

சென்னை: “எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்டர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.” என்று கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவத்தில் இபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்.

முன்னதாக நேற்று, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஏற்பட்ட ஜிப்லைன் பழுது காரணமாக, ரோப் காரில் பயணித்து கொண்டிருந்த 2 பெண்கள் அந்தரத்தில் தொங்கியவாறு அலறி கூச்சலிட்டனர். இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, “அரசு பூங்கா புதிதாக திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பிவரும் மக்களின் உயிரோடு பாதுகாப்பற்ற உபகரணங்களை கொண்டு திமுக அரசு விளையாடுவது கண்டனத்துக்குரியது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவுக்கு நுழையவே ரூ.100 கட்ட வேண்டும். இதுதவிர ஒவ்வொரு வசதிக்கும் தனி கட்டணம்.

Read Entire Article