கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்..!

2 months ago 13
சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் வயிற்று வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பித்தப்பை கல் பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்க்கு அவசர சிகிச்சை பிரிவில் எவ்வித சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும், துண்டு சீட்டில் சிகிச்சை விவரங்களை எழுதிக் கொடுத்ததாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ்க்கு அங்கு சிகிச்சை தொடர முடியாத நிலையில், நோய் தீவிரத்துடன் அழைத்து வரப்பட்டதாக கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விக்னேஷ் அழைத்துவரப்பட்ட அன்று மருத்துவர்கள் பணியில் இருந்ததாகவும், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article