கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி

2 months ago 10

சிவகங்கை, பிப். 18: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் அருகே மாதவராயன்பட்டியை சேர்ந்த அழகு என்பவரின் மனைவி இந்திராணி (46). இவர் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த நிலையில் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து அவர் மீது நீரை ஊற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கணவர் அழகு மற்றும் அவரது சகோதரர் சுப்பையா ஆகியோர் இந்திராணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அது குறித்து புகார் அளித்தும் எஸ்.வி மங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மண்ணெண்ணை ஊற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம பரபரப்பு ஏற்பட்டது.

The post கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article