கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி: திடீர் பரபரப்பு

3 hours ago 2

 

தேனி, நவ.26: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வாளகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த முதியவர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர். இதன்படி, நேற்று 290 மனுக்களை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் குருசாமி (71). நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இவர் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்த அரங்கிற்கு முன்புறம், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக் கொள்ள முயற்சித்தார். இதனைபார்த்த அப்பகுதியில் இருந்த போலீசர் விரைந்து சென்று அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, முதியவர் குருசாமியின் மகன், குருசாமிக்கு சொந்தமான பணம் மற்றும் நகை ஆகியவற்றை அபகரித்துக் கொண்டதாகவும், தன்னை கவனிக்காமல் இருப்பது குறித்து போலீசில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இச்சம்பவம் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி: திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article