கலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு

7 months ago 53

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்பட செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி) திருமலைக்கு வந்தது.

அந்தக் குழுவின் அதிகாரியான சர்வஸ்ரேஸ்தி திருப்பாட்டி தலைமையிலான குழுவினர் முதலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு அவர்கள் கோவிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானத்தின் கிடங்கு, ஆய்வகம் ஆகியவற்றில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். மேலும் கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவன பிரதிநிதிகளிடமும் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read Entire Article