கறம்பக்குடி அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்ற வேண்டும்

4 months ago 19

 

கறம்பக்குடி,டிச.17: கறம்பக்குடி அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டம் மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தீத்தான் விடுதி ஊராட்சியில் உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில் குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் நல வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆஸ்பட்டாஸ் சீட் மூலம் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்டவுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்படை கல்வி கற்க அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் மூலம் குழந்தைகள் தங்கள் கல்வி வளர்ச்சியை வளர்த்து கொண்டனர். நாளடைவில் ஆஸ்பட்டாஸ் சீட் மூலம் அமைக்கப்பட்ட அந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக அங்கன்வாடி மையம் வேறொரு இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கறம்பக்குடி அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article