கறம்பக்குடி அருகே தைலமரக்காட்டில் திடீர் தீ

2 months ago 10

 

கறம்பக்குடி, பிப்.18: கறம்பக்குடி அருகே விவசாயிக்கு சொந்தமான தைலமரக்காட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தடுத்து அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதி மேற்கு பகுதியை சேர்ந்தவர் சரவணன் விவசாயி. இவருக்கு சொந்தமான தைலம் மர காடு நேற்று மாலை திடீரென தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சிறை சீலன் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தைலம் மரக்காட்டில் மரங்களில் பற்றிய தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்து தங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

The post கறம்பக்குடி அருகே தைலமரக்காட்டில் திடீர் தீ appeared first on Dinakaran.

Read Entire Article