கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை ராதிகா ஆப்தே

3 months ago 22

லண்டன்,

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த 'தோனி' படத்தின் மூலம் அறிமுகமானார். ரத்த சரித்தரம், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர்.துணிச்சலான நடிகையான ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார்.ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதற்காக நடிப்பை கைவிடப்போவதில்லை என்றும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

தங்களை இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களென நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்ததும் சர்ச்சையானது.'மேட் இன் ஹெவன் 2' தொடரில் தலித் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது 2 புதிய ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடாமல் இருந்த ராதிகா ஆப்தே தற்போது தனது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ராதிகா ஆப்தே நடித்திருக்கும் சிஸ்டர் மிட்நைட் எனும் படம் லண்டனில் நடைபெறும் பிஎப்ஐ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கரன் காந்தாரி இயக்கியுள்ளார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களைத்தான் பதிவிட்டுள்ளார்.

ராதிகா ஆப்தே, வயலின் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012ல் திருமணம் செய்தார். 2011ல் லண்டனில் நடனம் பயிலச் சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2012ல் இருந்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ராதிகா ஆப்தே லண்டனில் குடியேறியதாகவும் தகவல் வந்தது. லண்டன், மும்பை என்று படங்களுக்காக ராதிகா ஆப்தே அலைந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article