கர்நாடகாவில் அரசு அலுவலக வளாகங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை

2 months ago 13

பெங்களூரு,

கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி யாரேனும் பொது இடங்களில் நின்று புகைப்பிடித்தால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெட்டி கடைகளின் அருகே நின்று புகைப்பிடிப்பவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கர்நாடகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாவட்டம், தாலுகா, கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகம் மற்றும் வளாகங்களிலும் குட்கா, சிகரெட் உள்பட புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் மீறி அரசு அலுவலகம் மற்றும் வளாகத்தில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான எச்சரிக்கை பலகைகளை, அனைத்து அலுவலகங்களிலும் வைக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article