கர்நாடகா: லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

1 month ago 5

பெங்களூரு,

கர்நாடகாவில் டீசல் விலை ரூ.2 உயர்த்தப்பட்டதுடன், சுங்கச்சாவடிகளில் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. இதனால் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மாநில அரசின் கீழ் உள்ள 18 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் லாரி டிரைவர்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்தது. வேலை நிறுத்த போராட்டத்திற்கு விமான நிலைய வாடகை கார்கள், டேங்கர் லாரிகள் சங்கம், ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் லாரிகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட சங்கங்கள் முழு ஆதரவு அளித்திருந்தன.

இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகளிடையே இன்று பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது  சுமுக உடன்பாடு ஏற்பட்டநிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article