
பெங்களூரு,
கர்நாடகாவின் சாந்திநகர் பகுதியில், போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கா ரெட்டி 148 ஏசியில்லா மின்சார பஸ்களை இன்று கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். பார்வையற்றவர்களுக்கான இந்த சிறப்பு பஸ்கள் டெல்லி ஐ.ஐ.டி.யில் சிறப்பு தொழில் நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி ராமலிங்கா ரெட்டி, தி கான்டினென்டல் இந்தியா நிறுவனம் இதற்கான நிதியை வழங்கியது. டெல்லி ஐ.ஐ.டி.யின் ரெயிஸ்டு லைன்ஸ் அறக்கட்டளை சார்பில் தொழில் நுட்ப உதவியுடன் இவை உருவாக்கப்பட்டு உள்ளன.
அனைத்து பஸ்களையும் நாங்களே வழங்குவோம் என இன்றைய விழாவில், அவர்கள் உறுதியளித்தனர். இது பார்வையற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.
இந்த பஸ் பற்றிய அனைத்து தகவல்களையும், நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் பார்வையற்றவர்கள் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.