கர்நாடக நில முறைகேடு வழக்கில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: பெங்களூரு, மைசூருவில் நடந்தது

2 weeks ago 5

பெங்களூரு: மூடா மாற்று நில முறைகேடு வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு பில்டரின் வீடு உட்பட பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் 8 இடங்களில் சோதனை செய்தனர். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அதற்கு மாற்றாக 14 மனையிடங்களை ஒதுக்கிக் கொடுத்தது.

இதில் முறைகேடு நடந்ததாக லோக்ஆயுக்தா வழக்கு பதிந்து , சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜு ஆகியோர் மீது விசாரணை நடத்திவரும் நிலையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது.

மூடா முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில், கடந்த 18ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மைசூருவில் உள்ள மூடா அலுவலகம் உட்பட சில இடங்களில் ரெய்டு நடத்தினர். இந்நிலையில், நேற்று பெங்களூரு மற்றும் மைசூருவில் மொத்தம் 8 இடங்களில் மீண்டும் சோதனை செய்தனர். பெங்களூருவில் உள்ள ஒரு பில்டரின் வீடு மற்றும் இதில் தொடர்புடைய மற்ற சிலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மூடா ஆணையர் ரகுநந்தனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

The post கர்நாடக நில முறைகேடு வழக்கில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: பெங்களூரு, மைசூருவில் நடந்தது appeared first on Dinakaran.

Read Entire Article