கரூர், ஏப். 4: கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் நேற்று பங்குனி உத்தர விழாவினை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கருர் பசுபதீஸ்வரா கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்தர விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2ம்தேதி கிராம சாந்தியுடன் விழா துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்று விழா நிகழ்ச்சி நேற்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நு£ற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 4ம்தேதி முதல் 8ம்தேதி வரை தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்வுகளான ஏப்ரல் 9ம்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 11ம்தேதி திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு தினமும் காலை 7 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும், சுவாமி திருவீதி உலாவும், விழா நாட்களில் சொற்பொழிவும், இசை நிகழ்வும் நால்வர் அரஙகில் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்துள்ளனர்.
The post கரூர் பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனி உத்தர விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.