கரூர், ஜன. 18: கரூர் சேலம் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் சந்தோஷமடைந்துள்ளனர். கரூர் சேலம் பைபாஸ் சாலையில், சில குறிப்பிட்ட பகுதிகளில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.இதனடிப்படையில், தவிட்டுப்பாளையம் உட்பட சில பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள மண்மங்கலம் பகுதியிலும் மேம்பாலம் வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பாலப் பணிகள் எப்போது முடிவடையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். பாலப் பணிகள் காரணமாக அனைத்து வாகனங்களும் கீழ்ப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் சென்ற நிலையில், கடந்த சில நாட்களாக அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் வழியாக சென்று வருகிறது. கிட்டத்தட்ட பாலப் பணிகள் முடிவடைந்து வாகனங்கள் மேம்பாலத்தில் எளிதாக சென்று வருவதால் மண்மங்கலம் பகுதி உட்பட இதனை சுற்றிலும் உள்ள பகுதி மக்கள் தற்போது சந்தோஷமடைந்துள்ளனர்.
The post கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது appeared first on Dinakaran.