கரூர் அருகே பைக்கில் கூச்சலிட்டவாறு சென்றவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞரை குத்திக் கொலை - இருவர் கைது

6 months ago 20
கரூர் அருகே பைக்கில் கூச்சலிட்டவாறு சென்றவர்களைத் தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நண்பர்களான கிஷோக், விஸ்வேஸ்வரன் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி இரவு பைக்கில் கூச்சலிட்டவாறே மேட்டுப்பாளையம் வழியாகச் சென்றுள்ளனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டிக்கேட்டபோது, ஆபாசமாக அவர்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கதிரவன் என்பவரை கிஷோக்கும் விஸ்வேஸ்வரனும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article