உஜ்ஜைனி: மபி மாநிலம் உஜ்ஜைனியில் பிரசித்தி பெற்ற மகாகாலேஷ்வர் கோயில் உள்ளது.கடந்த 17ம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் காந்த் ஷிண்டே எம்பி கோயிலுக்கு வந்தார். காந்த், அவரது மனைவி,மகன் உட்பட 4 பேர் கோயில் கருவறைக்குள் நுழைந்து தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பக்தர்கள் கோயில் கருவறைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், கோயிலில் தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்ததில் கவனக்குறைவாக இருந்ததாக அதிகாரி வினோத் சவுக்சேவை பணியில் இருந்து நீக்கி கோயில் நிர்வாக அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக 3 பாதுகாவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
The post கருவறைக்குள் முதல்வரின் மகன் நுழைந்த விவகாரம்: உஜ்ஜைனி கோயில் அதிகாரி பணி நீக்கம் appeared first on Dinakaran.