கருப்பாக இருக்கிறாய் என கணவர் குடும்பத்தினர் கேலி.... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

6 hours ago 1

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கதக் (மாவட்டம்) டவுன் பெடகேரியை அடுத்த சரண பசவேஸ்வராநகரை சேர்ந்தவர் அமரேஷ் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூஜா (27). கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் 2 பேருக்கும் திருமணம் முடிந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாமனார் தேவேகவுடா, மாமியார் சசிகலா, மைத்துனர் வீரண்ண கவுடா ஆகியோர் புதுப்பெண் பூஜாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது பூஜா கருப்பாக இருப்பதாக கூறி, கேலி செய்துள்ளனர். இதனால் மனம் நொந்து காணப்பட்ட பூஜா நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெடகேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பூஜா கைப்பட எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் கணவரின் தாய், தந்தை, அண்ணன் ஆகியோர் எனது நிறத்தை பற்றி கூறி கேலி செய்தனர். இதனால் தற்கொலை முடிவை தேடி கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அதற்கு பூஜாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். பூஜாவை மாமனார், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என குற்றம் சாட்டினர். இதுகுறித்து பெடகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article