கருணாநிதி பேரன் என்பதனால் உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி: ஆர்.பி.உதயகுமார்

3 months ago 21

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கருணாநிதி பேரன் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் ஒரே ஆண்டில் துணை முதல்-அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி உழைப்பால் பதவிக்கு வந்தவர். ஆனால் உதயநிதி பிறப்பால் பதவிக்கு வந்தவர்.

எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் மொத்த வடிவமாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article