சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரியகோயில் நீர்தேக்கத்திலிருந்து அணையின் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காகவும், கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், பழைய பாசனப் பகுதிகளுக்கு 30.04.2025 அன்று காலை 8 மணி முதல் அணையின் மிகை நீர்வழிந்தோடி (Spillway) மூலம் 108 கன அடி/வினாடி என நாளொன்றுக்கு 9.33 மில்லியன் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு 91.87 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய பாசனப் பகுதிகளுக்கு 10.05.2025 அன்று காலை 8 மணி முதல் அணையின் வலது புறகால்வாயின் மூலம் 15 கன அடி/வினாடி மற்றும் இடது புற கால்வாயின் மூலம் 15 கன அடி/வினாடி என மொத்தம் 30 கன அடி/வினாடி வீதம் நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கன அடி வீதம் 24 நாட்களுக்கு 61.25 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், சிறப்பு நனைப்பாக (special wetting) தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, குமாரப்பாளையம், கொட்டவாடி, கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, அபிநவம், ஏத்தாப்பூர், புத்திரகவுண்டம்பாளையம், சின்னம்மசமுத்திரம், ஏர்ரமசமுத்திரம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.
The post கரியகோயில் நீர்தேக்கத்திலிருந்து 24 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை appeared first on Dinakaran.