கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் மதுரை பெரிய பள்ளியில் நல்லடக்கம்

3 days ago 3

மதுரை: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புற்று நோய் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

புற்று நோய் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளரான ஹுசைனி, சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் பாக்சிங் கோச்சராக நடித்திருந்தார்.

மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் தான் முதலில் அறிமுகமானார். அது போல் பத்ரி படத்தில் விஜய்க்கு பாக்சிங் சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராகவும் ஹுசைனி நடித்திருக்கிறார். 60 வயதான இவருக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தான் ஒரு நாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும் என்ற நிலையில், மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களும் ஒன்றும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டதாகவும் கூறிய அவர், மேலும் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் தான் எதை பற்றியும் பயப்படவில்லை. தான் தைரியமாக போராடுவதாக கூறியிருந்தார்.

கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷிகான் ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார். ஷிகான் ஹூசைனி மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல் பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

The post கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் மதுரை பெரிய பள்ளியில் நல்லடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article