தேனி: கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77.
1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன் கம்பத்தைச் சேர்ந்தவர். உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுரத்தர் ஹவுதியா கல்லூரியில் பிஏ பட்டப் படிப்பையும், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் எம்ஏ படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியில் பிஎல் படிப்பையும் முடித்துள்ளார். இவரது பெற்றார் ஓ.ராமசாமித்தேவர் - சொர்ணத்தாய். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், விவசாய சங்கத் தலைவராகவும், கம்பம் நகராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 1991 பொதுத் தேர்தலில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1996, 2001 என அடுத்தடுத்த தேர்தல்களிலும் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.