கம்பம் முன்னாள் எம்எல்ஏ காலமானார்

3 months ago 22

 

கம்பம், அக். 5: கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமசந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன்(78) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு 3 முறை தொடர்ந்து கம்பம் எம் எல் ஏவாக பணியாற்றினார். இவரது உடலுக்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கம்பம் வர்த்தகசங்கம் சார்பில் இன்று கடையடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கம்பம் முன்னாள் எம்எல்ஏ காலமானார் appeared first on Dinakaran.

Read Entire Article